தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகை வரவிருபபதால், தமிழக மக்களுக்கு ரூபாய் 2,500 உள்பட பொங்கல் பரிசை வழங்குவதாக முதல்வர் பழனிச்சாமி (CM Palanisamy) அறிவித்திருந்தார். ரேசன் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் முறையில் விநியோகம் செய்யப்பட்டது. இதில், பொங்கல் பரிசு வாங்காமல் விடுபட்டவர்களுக்கு ஜன 18 முதல் 25 ஆம் தேதி வரை வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு:
2500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வரும் 25 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் கடந்த 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு (Pongal Gift) தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், 13 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபடாமல் வழங்க ஏதுவாக 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் அறிவித்துள்ளார். பொங்கல் துணிப்பை பெறாதவர்களுக்கும் அதனை வழங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி இருக்கிறார். இந்த அறிவிப்பால் பொங்கல் பரிசை வாங்க முடியாத சூழலில் இருந்தவர்களுக்கு, இப்போது வாங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு 35 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது!
ரேஷன் கடையில் பனங்கருப்பட்டி வழங்க பரிசீலனை! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!