News

Thursday, 02 May 2019 01:39 PM

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பட்டய படிப்பினை வழங்க முன் வந்துள்ளது. பள்ளி கல்வி துறையின் ஒப்புதலுடன் ஓராண்டு கம்ப்யூட்டர் இன்ஜினீயர் படிப்பு மற்றும் பயிற்சியையும், மூன்றாண்டுகள் சம்பளத்துடன் கூடிய வேலையையும் தருகிறது. நான்கு ஆண்டுகள் நிறைவடையும் பொழுது பட்ட படிப்பிற்கான சான்றிதழ்கள், வேலை செய்ததிற்கான சான்றிதழ் இவை அனைத்தையும் வழங்குகிறது,

பிளஸ் 2  இல் கணிதம், வணிக கணிதம், படித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எச்.சி.ல் கல்லூரியில் சேருவதற்கு நுழைவு தேர்வினை நடத்தும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரியில் சேர இயலும். இதற்கான கல்வி கட்டணம் முதலாமாண்டு செலுத்த தேவையில்லை. கல்வி கட்டணமான  2 லட்சம் ரூபாயினை வங்கிகள் கடனாக தருகிறது. 5 ஆண்டுகள் முடித்த பின்பு கடனை செலுத்தினால் போதுமானது.

பள்ளி கல்வித்துறை இயக்குனர் கூறுகையில், இது குறித்து சுற்றறிக்கை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படித்து 60 விழுக்காடு பெற்ற மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என் கூறியுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் இது குறித்து மேலும் அறிந்து கொள்ள 8438002947 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்களின் முழு விபரங்களையும் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் chennai.hcl@hcl.com.  8448386390, 8448386392 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் நேர்முக தேர்வு நடக்குமிடம் தெரிவிக்க படும்.

எச்.சி.ல் நிறுவனத்தின் துணை இயக்குனர் கூறுகையில், "60 விழுக்காடு பெற்ற மாணவர்கள் இதனை பயன் படுத்தி கொள்ளலாம்.  ஓராண்டு பயிற்சிக்கு பின்னர்  எச்.சி.ல் நிறுவனத்தில் பணியில் அமர்த்த படுவார்கள். மூன்றாண்டு பணி புரியும் போது ரூ 17000 முதல் ரூ 23000 வரை சம்பளம் வழங்க படும். மேலும் இங்கு பணிபுரியும் காலத்தில் பல்கலைகழகத்தில் உயர் கல்வியினை தொடர ஏற்பாடு செய்கிறது" என்றார்.   

சிறப்பம்சம்

  • கல்வி கட்டணத்தை வங்கிகள் செலுத்தும். ஐந்தாண்டுகள்  கழித்து திரும்ப செலுத்தினால் போதுமானது.
  • படிக்கும் சமயத்தில் மாதம் 10000 வரையிலான உதவித்தொகை வழங்க படுகிறது. தாங்கும் வசதி அனைத்தும் இலவசம்.
  • 9 மாதங்கள் கல்லூரியில் பயின்று பின்னர், 3 மாதங்கள் எச்.சி.ல் நிறுவனத்தில் நேரடி பயற்சி.
  • அடிப்படை ஆங்கிலம், ஐ.டி பயிற்சி, மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிய தேவையான பயிற்சி ஆகியன வழங்கப்படும்.

இந்த வாய்ப்பினை அனைவரும் பயன் படுத்தி கொள்ளுமாறு நிறுவனர் கேட்டு கொண்டார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)