அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 செல்சியஸ் (103.1 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவானது. அடுத்ததாக மதுரை விமான நிலையத்தில் 38.7 செல்சியஸ் (101.66 ஃபாரன்ஹீட் டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. மதுரை நகரில் 38.6 செல்சியஸ் (101.48 ஃபாரன்ஹீட் டிகிரி) ஈரோடு, சேலத்தில் 38 ( 100.4 ஃபாரன்ஹீட் டிகிரி) பதிவாகியிருந்தது.
தமிழகத்தில் இன்று 5 பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவானது.இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு சென்ற மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 5 பகுதிகளில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், சேலம் ஆகிய 5 பகுதிகளில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது.
அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 செல்சியஸ் (103.1 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவானது. அடுத்ததாக மதுரை விமான நிலையத்தில் 38.7 செல்சியஸ் (101.66 ஃபாரன்ஹீட் டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. மதுரை நகரில் 38.6 செல்சியஸ் (101.48 ஃபாரன்ஹீட் டிகிரி) ஈரோடு, சேலத்தில் 38 ( 100.4 ஃபாரன்ஹீட் டிகிரி) பதிவாகியிருந்தது.
மேலும் படிக்க
Pig Farming subsidy: பன்றி வளர்ப்புக்கு 95% மானியம் அளிக்கும் அரசு!