News

Monday, 31 May 2021 07:11 AM , by: Daisy Rose Mary

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி,


தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வரும் ஜூன் 2 மற்றும் 3ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை முன்னறிவிப்பு

இன்றும் நாளையும் தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • இன்று குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும், இதேபோல் கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

  • இன்று முதல் வரும் 3ம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

  • இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க....

சூறாவளி காற்று வீசியதால் 250 ஏக்கர் முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன! இழப்பீடு வேண்டி விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சியில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ 9¼ கோடி ஒதுக்கீடு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)