மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவு வெப்பத்தின் தாக்கம் இருந்துவருகிறது.
4 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும், தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஓட்டி இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் உள் கர்நாடகா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகக் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்
வரும் 7ம் மற்றும் 8ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையை நிலவும்
வரும் 09 மற்றும் 10ம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.