தலைவாசல் பகுதியில் ரூ. 2க்கு விற்பனை
சேலம் மாவட்டம் தலைவாசல், சுற்றுவட்டார பகுதிகளில் முள்ளங்கி அதிகளவில் பயிரிடப்பட்டு தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, தலைவாசல் சுற்றுவட்டாரங்களில் இருந்து, நான்கு முதல் ஐந்து டன் வரத்து இருந்த நிலையில், ஒரு மூட்டை (40 கிலோ) 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதன்படி, ஒரு கிலோ, இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்றது.
1 கிலோ முள்ளங்கி 1 ரூபாய்
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சின்னகுன்னத்தூர் கிராமத்தைச் தேர்ந்த விவசாயி முருகன் தனது ஒரு ஏக்கர் நிலைத்தில் முள்ளங்கி பயிரிட்டு பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சந்தைக்கு முள்ளங்கி வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ முள்ளங்கியை வியாபாரிகள் 1 ரூபாய்க்கு கேட்பதால் விவசாயி வேதனை அடைந்துள்ளனர்.
முள்ளங்கியை 1 ரூபாய்க்கு விற்பனை செய்தால் அதனை பறித்து எடுக்கும் கூலி ஆட்களுக்கு கூட கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்படுவதாக அவர் கூறினார்.