News

Monday, 12 August 2019 09:10 AM

கடந்த சில தினங்களாக தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சுற்றி அமைத்துள்ள நீலகிரி, கோவை, தேனி. நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ  மழை தீவிரம் அடைந்துள்ளதால், கேரளாவில் கனமழையால்  தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. குறிப்பாக  வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தினால் தொலைத்தொடர்பு, போக்குவரத்துக்கு, மின்சாரம் என அனைத்தும் துண்டிக்கப் பட்டுள்ளது. கனமழையால் உண்டான நிலச்சரிவில் பலர் சிக்கி இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப்பணிகள் பாதிக்கப்படுவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் உயர்த்து வருகிறது.

தமிழக கேரள எல்லை பகுதிகளான சாலக்குடி – வால்பாறை சாலைகளில் மரங்கள் எல்லாம் சரிந்து கிடப்பதால்  போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் தேயிலை தோட்டங்கள் எல்லாம் நிலச் சரிவால் அடித்துச் செல்லபட்டுள்ளது. தேயிலை தோட்டத்தைச் சுற்றி வசித்து வந்த   தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை  இன்றும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமர்ந்திருக்கும் மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி. நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)