தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினாலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தின் இன்னும் பல பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்து வந்தது. இதனால், சாலைகளில் மழை நீர் தேங்கிருப்பது, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தீங்கு ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், சென்னை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாமக்கல், திருவாரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், ஆகிய 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: