தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர்,கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேர நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் , ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது
மழை பொழிவு
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 21 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது, நாமக்கல்லில் 13 செ.மீ மழையும், பெண்ணாகரம், அகரம் சிகூர் பகுதியில் தலா 8 செ.மீ., மலை பதிவாகியுள்ளது.
மீனவர்கள் எச்சரிக்கை
-
இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்று மற்றும் நாளை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்று தென் கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடலோர பகுதிகள் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் மீனவர்கள் மேற்கொண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
சாலையோர வியாபாரிகள் ஓராண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்தினால் கூடுதல் சலுகைகள்!!
நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய் - கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!
விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விதைப் பரிசோதனை அவசியம் - வேளாண் துறை