தென்மேற்கு பருவ மழை காரணமாக மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களில் 400 செ.மீ மழை பதிவாகியுள்ளதால் மும்பை மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புறநகரின் மால்ட் பகுதியில் கனமழை காரணமாக பிம்ரிபாடாவில் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 13 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். புனேயில் அமேகான் பகுதியில் கல்வி நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகி உள்ளனர். மற்றும் சின்காட் இன்ஸ்டியூட்டில் கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தங்கியிருந்த அறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவங்களில் மீட்கப்பட்டவரக்ள் மற்றும் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து முடங்கிது. அந்தேரி, வில்லே பர்லே, ஜோகேஸ்வரி, தாசிகர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் முற்றிலும் சூழ்ந்துள்ளது. பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்ல முடியாமல் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர், இதனால் மும்பையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் மற்றும் விமான சேவை ரத்து
மும்பை சர்வதேச விமானநிலைத்தில் ஓடுபாதை நீரில் மூழ்கி உள்ளதால் 54 விமானங்களை வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ள காரணத்தால் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற இடங்களில் இருந்து மும்பைக்கு வந்து சேரும் ரயில்களை வேறு வழி இன்றி ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
K.Sakthipriya
Krishi Jagran