தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் 59 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2.36 கோடியும், மழையால் ஏற்பட்ட விபத்துக்களில் காயமடைந்த 13 பேருக்கு ரூ.55,900ம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதுதவிர கால்நடைகளை இழந்தவர்களுக்கு ரூ.2.84 கோடியும், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு ரூ.10.17 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
கடந்த 24 மணி நேரத்தில், 209 கால்நடைகளும், 5,600 கோழிகளும் இறந்துள்ளன, 1,139 குடிசைகள் மற்றும் 189 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அக்டோபர் 1 முதல் நவம்பர் 29 வரை, தமிழகத்தில் சராசரியாக 635.42 மிமீ மழை பெய்துள்ளது, இது இந்த காலகட்டத்துக்கான இயல்பை விட (352.60 மிமீ) 80 சதவீதம் அதிகமாகும் என்று அமைச்சர் கூறினார். 2015ல் சென்னையில் 1,610 மிமீ மழை பெய்த நிலையில், இதுவரை 1,866 மிமீ மழை பெய்துள்ளது.
மாநிலம் முழுவதும் 182 நிவாரண முகாம்களில் 15,164 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார். சென்னையில் 13 நிவாரண மையங்களில் 1503 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: