News

Wednesday, 22 September 2021 04:31 PM , by: T. Vigneshwaran

Tamil Nadu Weather updates

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணத்தால் இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை கடலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, வருகின்ற 24ம் தேதி விழுப்புரம் , புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பெரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வருகின்ற 25 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், புதுவை ,காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும். 26-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யவுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ மழையும், சென்னை மெரினாவில் 10 செ .மீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

மு.க. ஸ்டாலின்: ரூ.699.26 கோடியில் நலத்திட்ட உதவிகள்

பெட்ரோல் விலை: வாகன விரும்பிகள் மகிழ்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)