தமிழகத்தில் நாளை ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. ஏற்கனவே, வடகிழக்குப் பருவமழையினால் 17 மாவட்டங்களில் எதிர்பார்த்ததை விட அதிக மழைப்பொழிவு பதிவாகும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் வருகிற இரண்டு நாட்களும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை 7-ந்தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
8-ந்தேதியும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
NMMS உதவித்தொகை: மாணவர்களுக்கு ₹12,000 உதவித்தொகை, விண்ணப்பிக்க அறிவிப்பு!