தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை நிறைய மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஜூலை 11ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் யூகித்துள்ளது. குறைந்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை கோவை, நீலகிரி, தேனி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடையநல்லூரிலும் 14 செ.மீ. வரை மழை பதிவானது. கள்ளக்குறிச்சி, எறையூரில் தலா 13 செ.மீ, ஆரணி, மரக்காணத்தில் தலா 11 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் ஜூலை 11ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு முதல் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் எனவும் மேலும் தெற்கு ஒடிசா முதல் வடக்கு ஆந்திர பகுதிகளில் உருவாகும் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் உள்ளதால் வரும் ஜூலை 14, 15ஆம் தேதியில் மத்திய, வட மேற்கு இந்தியாவில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம்,மற்றும் புதுச்சேரி,காரைக்காலில் கனமழை பெய்யலாம் என்றும் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
உலகின் மிக விலையுயர்ந்த பழங்களின் விவரங்கள் இதோ!!
ஒரு துண்டு திராட்சையின் விலை ரூ.35,000: உலகின் மிக விலையுயர்ந்த 'ரூபி ரோமன்' திராட்சை.
அரசாங்கத்தின் உதவியுடன் 12 லட்சம் முதலீட்டில் டீசல் விற்கும் தொழில்: வருமானம் 100 கோடி