News

Sunday, 15 November 2020 06:44 PM , by: Elavarse Sivakumar

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வட தமிழகம் வரை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில்  சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்க விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில், மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை (Heavy rain Warning)

அதேநேரத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

வானிலை முன்னறிவிப்பு (Weather forecast)

  • அடுத்த 48 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

  • கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

  • மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

காலக்கெடு முடிகிறது - விவசாயிகள் கவனத்திற்கு!

விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்கும் சூரிய ஒளி மின்வேலி!

இந்த 10 ரூபாய் இருந்தால், அடிக்கப்போகிறது யோகம்- கொட்டப்போகிறது பணம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)