தொடர் மழை காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளிலும், காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலைஉயர்வு (increase in price)
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் சரி, வெளுத்து வாங்கிய கனமழையானாலும் சரி. தமிழகத்தைப் பொருத்தவரை உடனடியாக ஏறிவிடுகிறது காய்கறிகளின் விலை. இதனால் பாதிக்கப்படுவது எப்போதுமே நடுத்தர வர்க்கத்தினர்தான்
வரத்து குறைவு (Low supply)
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி விலை அதிகரித்திருக்கிறது. அந்தவகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிலும் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.
சதம் அடித்த தக்காளி
அத்தியாவசிய உணவுப்பொருளான தக்காளி விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தக்காளி மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது. முருங்கைக்காய் ரூ.110-க்கும், கத்தரிக்காய், கேரட், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 2 மடங்காக அதிகரித்துள்ளது.
தொடர் மழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்தால் விலை மேலும் அதிகரிக்கும் என கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறுகின்றனர்.திடீர் விலைஉயர்வு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், நுகர்வோரின் தலையில் இடியாக விழுந்துள்ளது.
ரூ.140 வரை
கோயம்பேடு மார்க்கெட்டிலேயே தக்காளி கிலோ ரூ.100க்கு விற்கப்படும் நிலையில், அங்கு கொள்முதல் செய்து வந்து விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் ரூ.140 வரை விற்பனை செய்வதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!