ஆத்தூர் கிச்சலி சம்பா நெல் சாகுபடியில், நடவு செய்தல், களையெடுத்தல், நோய்தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் எளிமையான வழிமுறைகளை கூறுகிறார் இயற்கை விவசாயி ஸ்ரீதர்.
ஆத்தூர் கிச்சலி சம்பா
அதிக மகசூல் தரவல்ல பாரம்பரிய நெல் ரகங்களில் இதுவும் ஒன்று. நெல் ஓரளவு சன்னமாக இருக்கும். இதன் வயது சுமார் 130 முதல் 140 நாள்.
பாரம்பரிய நெல் ரகங்களில் இந்த ரகத்திற்கு தான் சத்துக்கள் கொஞ்சம் அதிகம் தேவை என்பதால் அதற்கு ஏற்ப மகசூலும் கிடைக்கும். அதேசமயம் தழைச்சத்து அதிகம் போகாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் பயிர் சாயாமல் தடுக்கலாம்.
இயற்கை முறையில் இந்த நெல் சாகுபடி சம்பா பட்டத்தில் செய்யப் படுகிறது. அதாவது புரட்டாசி மாதம் நடவு செய்து மார்கழி மாதம் கடைசியில் அறுவடை செய்யப்படுகிறது. விதை ஏக்கருக்கு ஐந்து முதல் பத்து கிலோ வரை கிடைக்கும்.
சாகுபடி முறைகள்
வைக்கோல் படுகை முறையில் நாற்று விடும் போது விதை நெல் மூன்று முதல் ஐந்து கிலோ வரை போதுமானது.
இந்த முறையில் சுமார் ஐந்து செ.,மி நீளம் உடைய வேர்களுடன் கூடிய நாற்றுகள் கிடைக்கும். அதாவது இருபது நாட்களில் .வேர் நீளமாக இருப்பதால் அதிக தூர்கள் கிடைக்கும். நாற்று பறிப்பது மிக எளிது.
பாரம்பரிய முறையில் ஏக்கருக்கு சுமார் இருபத்தைந்து கிலோ விதை நெல் தேவைப்படும். வரிசை நடவு சிறந்தது. இடைவெளி 30 செ.,மீ அல்லது நாற்றுக்கு நாற்று 25செ.மீ வரிசைக்கு வரிசை 30 செ.,மீ இயந்திர நடவும் சிறப்பானது. ஒன்று அல்லது இரண்டு நாற்றுகள் ஒரு குத்தில் நடலாம்.
நடவு வயலுக்கு அடி உரமாக ஏக்கருக்கு பத்து டன் தொழு உரம் அல்லது இரண்டு டன் மண்புழு உரம் இடலாம். முன்னதாக பசுந்தாள் விதை தூவி பின்னர் அவை வளர்ந்த பின் மடக்கி சேற்றில் உழுது அந்த வயலில் நெல் நாற்றுக்களை நடவு செய்தால் குறைவான சத்துக்களே போதும்.மகசூல் அதிகரிக்கும்.
கோனோவீடர் மூலம் களைகளை கட்டுப்படுத்தும் போது பயிர்களில் வேர் வளர்ச்சி வேகமாகும் இதனால் அதிக தூர்கள் வெடிக்கும்.
கற்பூரகரைசலை பயன்படுத்தும் போது பூச்சி தாக்குதல்களை முற்றிலும் தடுக்கலாம்.
பயிர் கரும் பச்சை நிறத்தில் மாறும்.மறுநாள் வயலில் அதிக எண்ணிக்கையில் நன்மை செய்யும் பூச்சிகளை காணலாம்.
ஊட்டச்சத்து மேலாண்மை
தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலை வாரம் ஒருமுறை பாசன தண்ணீர் ல் கலந்து விடுவதால் அனைத்து சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்கும் இதனால் நல்ல மகசூல் கிடைக்கும். பயிர் வளர்ச்சி குறைவாக இருக்கும் பட்சத்தில் மீன் அமிலத்தை தெளிக்கலாம்.இதன்மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
VAM தொழு உரத்துடன் கலந்து இடலாம் . தேவைப்பட்டால் திரவ உயிர் உரங்களை வெளியே வாங்கி மேம்படுத்தப்பட்ட அமிர் கரைசலில் கலந்து விடலாம் இதன் மூலம் மண்ணில் நுன்னுயிர்கள் பெருக்கம் அதிகரிக்கும். தேவைப்பட்டால் மீன் அமிலம் பயன் படுத்தலாம்
நல்ல மகசூல் பெறலாம்
ஏக்கருக்கு அதிகபட்சமாக முப்பது மூட்டை வரை கிடைக்க வாய்ப்பு. பாரம்பரிய ரகங்களில் கிச்சலி சம்பா மட்டுமே அரசாங்க நெல் ரகங்களுக்கு சமமான மகசூல் தரும் காரணம் கதிர்களில் நெல் மணிகள் நெருக்கமாக இருப்பது தான்.
நன்கு பயிர் விளைந்த பின்னர் அறுவடை செய்யும் போது தான் ஊட்டமான நெல் மணிகள் கிடைக்கும். சற்று சாயும் தன்மை கொண்டதால் மிகுந்த பள்ளமான பகுதிகளில் நடவு செய்வதை தவிர்ப்பது நல்லது.
சமைக்கும் போதுசுவையான சாதம் இந்த அரிசி மூலம் கிடைக்கும். பல மணி நேரம் வரை சாதம் கெட்டுப் போகாமல் இருக்க வாய்ப்பு .பழைய சாதம் தனி சுவை.
தகவல்
Sridhar Chennai.9092779779