நாட்டிற்காக போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், 'தியாகிகளுக்கு வீர வணக்கங்கள்' என்ற இயக்கத்தை, வரும் 26ம் தேதி பிரதமர் மோடி (PM Modi) துவக்கி வைக்கிறார்.
தியாகிகளுக்கு வீர வணக்கங்கள் (Heroic salutations to Martyrs)
இதுகுறித்து, ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, போரில் உயர் நீத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், 'தியாகிகளுக்கு வீர வணக்கங்கள்' என்ற இயக்கம், 26ம் தேதி பிரதமரால் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த இயக்கத்தின் கீழ், தியாகிகளின் 5,000 குடும்ப உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சி 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைபெறும்.
கௌரவிப்பு
நாடு முழுதும் உள்ள தேசிய மாணவர் படை இயக்குநரகங்கள், இந்த பாராட்டு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன. துவக்க தினமான 26ம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் தேசிய மாணவர் படை இயக்குநரகம், தமிழக மண்டலத்தில் உள்ள, 20 தியாகிகளின் குடும்பங்களுக்கு மரியாதை செலுத்த உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி வரை, தமிழக மண்டலத்தில் உள்ள 263 தியாகிகளின் குடும்பங்கள் கவுரவிக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க
கடுமையான உறைபனியில் தேச எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள்!