கார்பன் வெளியேற்றம் அதிகரித்து வருதால் சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பருவநிலையில் மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி.யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை (Indian Institute of Technology - Madras)சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல்கத்தா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர நகரங்களில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. சென்னையை பொருத்தவரை கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம், அப்போது ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் படி, பூமியின் மேற்பரப்பில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற காரணங்ளால் வளிமண்டல உறுதியற்ற தன்மை ஏற்படுகிறது, இதனால் வரும் காலங்களில் மாற்றங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆராய்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிகரிக்கும் மழைபொழிவு
பசுமை வாயுக்களை அதிகம் வெளியேற்றும் முக்கிய நகரங்களில் சென்னையும் ஒன்றாக இருந்து வருகிறது. இதே நிலை தொடர்தால், சென்னையில் வரும் ஆண்டுகளில் அதிகமாக மழைப்பொழிவை உண்டாகி, மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்றும், இதனால் பாதிப்பு பகுதிகள் வரும் காலங்களில் விரிவடையும் என்று ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டின் பெருவெள்ளத்தின் போது பெய்த அதிகபட்ச மழைப்பொழிவின் தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இது வரும் காலங்களில் 17.37 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தமிழகத்தில் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு கம்மி விலையில் வீடுகளை வழங்க உலக வங்கியுடன் ஒப்பந்தம்!
109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில் – ரயில்வே அமைச்சகம் அழைப்பு!!
ஜன்தன் திட்ட தமிழக பெண் பயனாளிகளுக்கு ரூ.610 கோடி நிதி - நிர்மலா சீதாராமன்.
மனஅழுத்தத்தை குறைக்கும் பத்மாசனம்!!