News

Friday, 11 June 2021 07:46 AM , by: Daisy Rose Mary

மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கும் முன் பெய்த மழையால் பெறும்பாலானா பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
இதேபோன்று, திறந்த வெளி கூடங்களில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகளும் மழையால் நனைந்து சேதம் அடைந்தன.
நடவடிக்கை எடுக்க நீதிபதி வலியுறுத்தல்

இதுதொடர்பான செய்திகள் ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியானதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர்.

அப்போது நெற்பயிர்களைப் பாதுகாத்து அறுவடை செய்வதற்கு விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அவ்வாறு கஷ்டப்பட்டு அறுவடை செய்யும் நெற்பயிர்களைச் சேதம் அடைய விடலாமா? என்று நீதிபதிகள் அரசுக்குக் கேள்வி எழுப்பினர், மேலும் மழை நீரில் நெற்பயிர்கள் வீணாவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும், இல்லாத பட்சத்தில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.

உடனடி நடவடிக்கைக்கு நீதிபதிகள் உத்தரவு

இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களைக் காய வைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டபோது அவை மழையில் நனைந்துள்ளதாகவும், இதுசம்பந்தமான முழு விவரங்களைப் பெற்றுத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, நெல் மூட்டைகள் மழையால் நனைந்து வீணாவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கு சம்பந்தமாகத் தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க...

உரங்கள் இருப்பு நிலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேளாண் ஏற்றுமதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சி - மத்தய அரசு!!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)