நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்ட் 16 ஆம் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரையும், தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு வேண்டுகிறேன் விடுத்தார். இதன்படி, இந்தியப் பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேசியக் கொடி (National Flag)
உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க செய்வதன் மூலம் மத்திய அரசின் சான்றிதழை பெறும் வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பட்டொளி வீசி பறக்க விடுங்கள். அதை செல்ஃபி எடுத்து https://harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் இருப்பிடத்தையும் பின் செய்யுங்கள்.
இதன் மூலம் உங்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் கிடைக்கும். இதுவரை இந்த இணையதளத்தில் உள்ள புள்ளி விவரப்படி 4.58 கோடி தேசியக் கொடிகள் ‛பின்' செய்யப்பட்டுள்ளன. மேலும், 2.38 கோடி செல்ஃபிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் என்ன யோசனை, உடனே தேசியக்கொடியை ஏற்றி, செல்ஃபி எடுத்து அப்லோடு செய்து மத்திய அரசின் சான்றிதழைப் பெறுங்கள்.
மேலும் படிக்க