'டெல்டா மாவட்டங்கள் உட்பட ஒன்பது மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மூலம் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக விழுப்புரம், கடலூர், உட்பட 6 மாவட்ட பள்ளி்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்கள் கழித்து பள்ளி திறக்க வேண்டிய நிலையில் மழை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட குறிப்பில் இலங்கை கடலோர பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள தெற்கு கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள்; புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும் கன மழை பெய்யவாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
எச்சரிக்கை:
கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபி கடல் பகுதிகளில் அதிகளிவில் காற்று வீசுகிறது. எனவே, 3ம் தேதி வரை, இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
LPG Price: சமையல் சிலிண்டர் விலை 266 ரூபாய் உயர்வு!
விவசாயிகளின் கணக்கில் ரூ.18000 வழங்கும் மாநில அரசு! எப்போது?