உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்குமாறு பள்ளி கல்வித்துறைக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் (Local elections)
தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
தேர்தல் தேதி (Election date)
முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளையும்(6ம் தேதியும்) 2ம் கட்ட தேர்தல் அக்டோபர் 9ம் தேதியும் நடைபெறுகிறது.
பொது விடுமுறை (Public holiday)
எனவே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்கள் மற்றும் தற்செயல் தேர்தல் நடைபெறும் 28 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
மதுக்கடைகளுக்கு விடுமுறை (Holidays for bartenders)
இதேபோல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அந்தந்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் பயிற்சி (Election training)
பள்ளிகள் தேர்தல் வாக்குசாவடி மையங்களாக செயல்படவுள்ளதாலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லவுள்ளதாலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
யாருக்கு இல்லை செல்ஃபி மோகம்- 140 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிர் தப்பிய அதிசயம்!