MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடைப்பெற்று வரும் MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது இன்று மார்ச் மாதம் 7 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. 15-க்கும் மேற்பட்ட மில்லினியர் விவசாயிகள் இந்த நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தனர்.
MFOI 2024 நிகழ்வுக்கான முன்னோட்டம்:
இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளை சிறப்பிக்கும் நிகழ்வாக சமீபத்தில் வெற்றிக்கரமாக நடைப்பெற்று முடிந்த, MFOI 2023 விருது நிகழ்வினைத் தொடர்ந்து, நடப்பாண்டிற்கான நிகழ்வுக்கு (MFOI Awards 2024) பரிந்துரை, மற்றும் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படும் சூழ்நிலையில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் (samridh kisan uttsav) நிகழ்வு இந்தியாவின் பல பகுதிகளில் கிரிஷி ஜாக்ரன் சார்பில் நடைப்பெற்று வருகிறது.
MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்வு:
மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்வு நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று மார்ச் 7 ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னோடி விவசாயிகள் பலரும் பங்கேற்றிருந்த நிலையில், வேளாண் துறையில் முன்னணி நிறுவனங்களாக விளங்கும் மஹிந்திரா டிராக்டர்ஸ், தனுகா அக்ரிடெக் போன்ற நிறுவனங்களும் தங்களது ஸ்டால்களை நிகழ்வில் அமைத்து இருந்தனர்.
கரும்பு பயிர்- விவசாயிகளுக்கு அறிவுரை:
பங்கஸ் மாதவி, கரும்பினை தாக்கும் பூச்சிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, ராமதாஸ் உக்ளே மஹிந்திரா டிராக்டர் நிறுவனத்தில் உள்ள டிராக்டர்கள் பற்றியும் அதன் சிறப்பியல்புகள், வேளாண் துறையில் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து வேளாண் தொழில்சார் வல்லூநர்கள் சிறப்புரையாற்ற வேளாண் துறையில் சிறந்து விளங்கும் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மில்லினியர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சமீபத்தில் உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூரில் முடிவடைந்த MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட முற்போக்கு விவசாயிகள் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5, 2024 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100- க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட உள்ள நிலையில் தற்போது தகுதியான விவசாயிகளிடமிருந்து விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
Read more: