News

Thursday, 31 October 2019 01:05 PM

இந்தியா மக்களின் ஆரோக்கியத்திற்கு கொடையாக இருப்பது  மூலிகைகள் ஆகும். எனினும் பெரும்பாலான தாவரங்கள் அதிகம் உற்பத்தியாவதில்லை. சில மூலிகைகள் அழியும் தருவாயில் உள்ளன. தற்போது காணக்கிடைக்கும்  மூலிகைகள் நமது தேவையை ஓரளவு நிவர்த்தி செய்து வருகிறது. மூலிகைப் பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகிறது. நடப்பாண்டில் இதற்காக 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதை விவசாயிகளுக்கு வழங்கும் பணிகளை தோட்டக் கலைத் துறையினர் துவங்கியுள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்ட மூலிகைகள்

  • செங்காந்தள்
  • சோற்றுக் கற்றாழை
  • மணத்தக்காளி
  • கூர்க்கன்
  • செம்மரம்
  • நெல்லி
  • வேம்பு
  • துளசி
  • வசம்பு
  • நித்திய கல்யாணி
  • சந்தன

மானிய விவரம்

  • அழிந்து வரும் அரிதான மூலிகைகளை பயிரிடுவதற்கு 75%
  • உற்பத்தி குறைந்து வரும் நீண்ட காலப் பயிர்களுக்கு 50%
  • மற்ற மூலிகைகளுக்கு 20%

என மானியம் நிர்ணயிக்க பட்டுள்ளது. நமது மாநிலத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நன்கு வளரும் மூலிகைகளை தேர்ந்தெடுத்து வளர்ப்பது நல்லது. தனி விவசாயியாக அல்லாமல் குழுவாக செயல்படுவது சிறந்தது. 1 எக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்ய மூலிகைப் பயிர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்கும். நீர் பற்றாக்குறை உள்ள விவசாயிகளுக்கு மேலும் சலுகைகளை வழங்கபடும் என  வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, தோட்டக்கலை இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)