தரைக்காற்று காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று முதல் வரும் 4ம் தேதி வரை, அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
31.03.21 முதல் 04.04.21 வரை
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலும் வறண்ட வானிலையே (Dry Weather) நிலவும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வாகனம் பொதுவாகத் தெளிவாகக் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு (Maximum temperature forecast)
31.03.21 முதல் 04.04.21 வரை
தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து, தமிழகப் பகுதி நோக்கி வீச சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீச வாய்ப்பு உள்ளது.
பிரசாரத்தைத் தவிர்க்கவும் (Avoid Campaign)
-
எனவே பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள், முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது, ஊர்வலம் செல்வது போன்றவற்றைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
மத்திய அரபிக்கடல் தற்போது நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அடுத்த 24 மணி நேரத்தித்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருமாற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக,
31.03.21 முதல் 01.04.21 வரை
-
அந்தமான் கடல்பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
எனவே இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
31.03.21
-
மன்னார் வளைகுடாப் பகுதிகளில், காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
01.04.21 முதல் 02.04.21 வரை
-
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தமிழகம், புதுவைக் கடலோரப்ப குதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையில் இருந்து, மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
இவ்விரு பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நிலக்கடலையில் புரோடினியா புழுக்கள்- கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!