தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் பயனடையும் வகையில் 3,510 வீடுகள் கட்டும் திட்டத்தை ரூ.142.16 கோடி மதிப்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மேல்மொணவூரில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் ரூ.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையம் வழங்கினார்.
மேலும் தமிழகத்தில் 106 முகாம்களில் வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் அரசு சார்பில் வழங்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா வேலூர், மேல்மொணவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத்திடலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மாஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.142.16 கோடி மதிப்பீட்டில் 3510 புதிய வீடுகள் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டினார். ரூ.30 கோடி மதிப்பிலான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டுதல் 3 பேருக்கு உயர்த்தப்பட்ட வீதத்தில் பணக்கொடை ஆணை, 4 பேருக்கு இலவச கைத்தறி துணிகள், 2 பேருக்கு இலவச எவர் சில்வர் பாத்திரங்கள், 3 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் உபகரணங்கலையும் வழங்கினார். 3 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அனுமதி சான்று மற்றும் உபகரணங்கள் வழங்கியுள்ளார்.
மாணவி ஒருவருக்கு இலவச கல்விக்கான முழு கல்வி கட்டண காசோலையும், கல்லூரி மாணவ-மாணவிகள் 5 பேருக்கு உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை ,13 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதிக்கான காசோலையும் வழங்கினார். முடிவில் அரசு செயலாளர் பொது மற்றும் நல்வாழ்வு துறை ஜகந்நாதன் நன்றி கூறினார்.
மேலும் படிக்க: