திருச்சி ஸ்ரீரங்கம் அருகே வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இது ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாக திகழ்கிறது. இது இயற்கை அழகு மிகுந்த சுற்றுலா இடமாக உள்ளது. இங்கு சென்றால் பல வகையான வண்ணத்துப்பூச்சிகளை காண முடியும். பல வகையான வண்ணத்துப் பூச்சிகளும் ஆங்காங்கே சிறகடித்து செல்லும். மேலும் புல்வெளிகளும் பூச்செ டிகளும் அவற்றில் பூத்துக் கொழும்பு பூக்களும் ஒரு இதமான சூழலை ஏற்படுத்துகிறது.
வண்ணத்துப் பூச்சி என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன.
இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், இங்கும் அங்கும் சிறகடித்துப் செல்வதும் பலரையும் மகிழ்ச்சி அடைய செய்யும்.
வண்ணத்துப்பூச்சி முதலில் முட்டையிலிருந்து, குடம்பி நிலையில் புழுவாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் அற்புதம். மேலும் பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும்.
மேலும் படிக்க
வெண்மை புரட்சிக்கு சொந்தக்காரர்- வர்கீஸ் குரியன்! யார் இவர்?