News

Friday, 02 August 2019 12:30 PM

எஸ்.பி வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (Minimum balance) வைத்திருக்க வேண்டும், இல்லையேல் அதற்கான அபராதம் வசூலிக்கப்படும். இந்நிலையில் குறைந்தபட்ச இருப்பு இல்லாததால் இவ்வங்கிக்கு அபராதத் தொகையே கோடிக்கணக்கில் சேர்ந்துள்ளது என்ற தகவல் வெளியாகியள்ளது.

BSBD வங்கிக் கணக்கு மூலம் தற்போது ஜீரோ பேலன்ஸ் (Zero Balance Account)  அக்கவுண்ட் ஓப்பன் செய்வது சுலபமாகியுள்ளது. இதில் பேங்க் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற அக்கவுண்ட்டை ஓப்பன் செய்தால் எவ்வித குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க தேவை இல்லை மற்றும் அதிகபட்ச தொகையாக வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

மேலும் மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு எப்படி டெபிட் கார்ட் (Debit Card) உண்டோ அதேப்போல் இவ்வங்கிக் கணக்கிற்கும் உண்டு. இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை மற்றும் ஆன்லைன் பணபரிவர்தனைக்கு (online transaction) எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

காசோலையை (Check) டெபாசிட் செய்தாலும், அதனை பணமாக மாற்றினாலும்  எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை மற்றும் மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே பண பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.    கூடுதல் சிறப்பாக இந்த வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி வரை இருப்பு வைத்திருந்தால், வருடத்திற்கு ரூ 3.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.        

K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)