News

Friday, 10 May 2019 02:37 PM

தண்ணீர் பற்றாக்குறை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலங்களில் மட்டுமே இருந்து வந்த  தண்ணீர் பற்றாக்குறை பரவலாக எல்லா காலங்களிலும் அதிகரித்து வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகையும், சரியான நீர் மேலாண்மை இல்லாததாலும், விளை நிலங்கள் எல்லாம் மனைகளாக உருமாறுவதாலும் நாம் இன்று பெரும் சவால்களை சந்தித்து வருகிறோம்.

மக்களின் தேவையினை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லை. மூன்றாம் உலகம் போர் என்பது தண்ணீர் தேவையினை பிரதானமானதாக கொண்டு இருக்கும் என இயற்கை ஆர்வலர்கள், சூழியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த பூமியானது மனிதர்களுக்கானது மட்டும் அல்ல. பல்லாயிரக்கான உயிரினங்கள் இப்புவியில் வாழந்து வருகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பெரு நகரங்களில் தண்ணீரினை விலை கொடுத்து வாங்கும் வேண்டிய நிலைமையில் உள்ளோம். தண்ணீர் என்பது இயற்கை நமக்கு அளித்த வரமாகும். முறையான பராமரிப்பு, மேலாண்மை இல்லாததினால் லட்சக்கணக்கான ஏரிகள், குளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சில இயற்கை ஆர்வலர்கள் தண்ணீரின் முக்கியத்தும், மேலாண்மை, நிலத்தடி நீரினை உயர்த்துவதற்கான யுக்திகள் ஆகியவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள்.நிலத்தடி நீரின் அளவை மேம்படுத்த மரம் வளர்ப்பு முக்கியமானதாகும். ஒரு சில மரங்கள் நிலத்தடி நீரின் அளவை அதிகரித்து, மழை பொழிவிற்கு உதவுகிறது. பனை மரம் என்பது முதன்மையானது.இருப்பினும் நாம் பல வருடங்கள் இதற்காக காத்திருக்க வேண்டும்.

மழை தரும் மரங்கள்

இன்றைய காலகட்டத்தில் இலுப்பை, பலா மற்றும் உதயன் போன்ற மரங்கள் வெகு விரைவில் பலன் தரக்கூடியவை என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். இவ்வகை மரங்களை வளர்பதினால் மண்வளம் பெருக்கி, மழை பொழிவிற்கு வழிவகுக்கும் என்கிறார்கள். நாம் விழித்து கொள்ள  வேண்டிய நேரம். அடுத்த தலைமுறையினருக்கு வேண்டி இந்த மண்வளத்தையும், நீர் வளத்தையும் காக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)