தமிழைக் கற்க வேண்டும் என எவ்வளவு முயற்சி செய்தாலும், என்னால் அதில் வெற்றி பெற முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
ஒவ்வொரு மாதமும் வானொலி மூலம் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அதன்படி, மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:
கூட்டுப் பரிசு (Collective gift)
நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வார்வதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். நீரானது நமக்கு இயற்கை அளித்த கூட்டுப் பரிசு. அதனை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
நீரை பாதுகாக்கும் கூட்டு முயற்சி திருவண்ணாமலையில் நடக்கிறது. அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக மூடப்பட்ட கிணறுகளை புதுப்பித்து வருகின்றனர்.
அஞ்ச வேண்டாம் (Do not be afraid)
நமது அறிவும் தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால், எதையும் கண்டு அஞ்ச வேண்டியது இல்லை. தற்போதைய இளைஞர்களிடம் புதிய மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய விஞ்ஞானிகள் குறித்து நமது இளைஞர்கள் படிப்பதுடன், இந்திய அறிவியல் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். தன்னிறைவு இந்தியா திட்டத்தில் அறிவியலின் பங்களிப்பு மிகப்பெரியது.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி, காசிரங்கா தேசிய பூங்காவில் 112 பறவை இனங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதற்கு நீர் சேகரிப்பும், குறைந்தளவு மனிதர்கள் நடமாட்டமும் காரணமாகும்.
தமிழ் மீது ஆசை (Desire on Tamil)
உலகின் தொன்மையான மொழியான தமிழை கற்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. தமிழ் இலக்கியம் மற்றும் கவிதைகளின் ஆழம் குறித்து என்னிடம் பலர் கூறியுள்ளனர். இந்த உலகத்தில் மிக அழகான மொழிகளில் தமிழும் ஒன்று.
தமிழ் கற்க வேண்டும் என நான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் என்னால் வெற்றி பெற முடியவில்லை. குஜராத் முதல்வரானதில் இருந்து பிரதமர் ஆன பின்பும் தமிழ் கற்று வருகிறேன். ஆனால், சரியாக கற்க முடியவில்லை. தமிழ் மிகவும் தொன்மையான மொழி. அந்த மொழியில் உள்ள இலக்கியம் மிகவும் தொன்மை வாய்ந்தவை.
விவசாய நிலத்தில் உள்ள பிரச்னைகளை விவசாயிகளே சரி செய்து வருகின்றனர். சுயசார்பு இந்தியாவை உருவாக்க பல விதமான அரசியல், விஞ்ஞான விஷயங்கள் உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் படிக்க...
வனத்துக்குள் திருப்பூர் திட்டம்! தன்னார்வ அமைப்புகளின் சாதனை!