News

Monday, 08 February 2021 09:39 AM , by: Daisy Rose Mary

Credit : The Tribune India

புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் விவகாரத்தில் போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேளு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்த சட்டத்திற்கு மறு உத்தரவு வரும் வரை இடைக்காலத் தடை விதித்தும் பாஜக அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

முட்டுக்கட்டை நீங்கும்

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் செய்தியாளர்களிடம் பேசி மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புதிய வேளாண் சட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமே போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. இந்த பிரச்சினையில் உள்ள முட்டுக்கட்டையை விரைவில் உடைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

அரசியல் செய்யும் காங்கிரஸ்

விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசுவதற்கு காங்கிரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு ஏன் எதுவும் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். மேலும், கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இத்தகைய சீர்திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது அந்த கட்சி இல்லை என மறுத்து கூறி வருகிறது. இந்த விவசாயிகள் பிரச்சினையில் அரசியல் செய்து காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாது என்றும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

விவசாயிகளின் புதிய திட்டம்! போட்டோ போராட்டம் விரைவில் ஆரம்பம்!

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்திய சக்கா ஜாம் போராட்டம்!

புறஊதாக் கதிர்களில் இருந்து தோலைப் பாதுகாக்க திராட்சைப்பழம்: ஆய்வில் தகவல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)