News

Thursday, 09 May 2019 03:34 PM

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் கிளையை மும்பையில் திறக்க உள்ளது. விலை உயர்த்த ஸ்மார்ட்ஃபோன்களுக்கான சந்தையில் ஆப்பிள் நிறுவனம் இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் சந்தை மதிப்பு குறைய தொடங்கி உள்ளது. சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, கூகுள் பிக்சல் நிறுவனங்கள் ஆடம்பர ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதற்கு காரணம் அந்நிறுவனங்கள் குறைத்த விலையில் அனைத்து வசதிகளையும் வழங்கி வருகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனம் மற்றும் ஐ ஃபோன்களின் சந்தை சரிந்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஆப்பிள் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அந்நிறுவனத்தின் வருவாயில் 45 சதவீத வருவாயானது அமெரிக்க சந்தையிலிருந்து வருகிறது என கூறியது. 18 சதவீத வருவாய் சீனாவிலிருந்தும், வெறும்  6 சதவீத வருவாய்  ஆசிய பசிபிக் சந்தையில் இருந்து கிடைப்பதாக கூறியிருந்தது.

இந்தியா அரசனது  வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிக அளவில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவிலேயே போன் உற்பத்தி செய்தால் , குறைந்த விலையில் ஃபோன்களை எதிர்பார்க்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு தர முடியும் என ஆலோசித்து வருகிறது,

இந்தியாவில் ஃபோன் விற்பனையை அதிகரிக்க பல சலுகைகளை அறிவித்த போதும் அதன் இலக்கை எட்ட முடியவில்லை எனலாம். எனவே ஆப்பிள் நிறுவனம்  ஃபோன் உற்பத்தியுடன், கூடவே அதன் நேரடி விற்பனையகத்தை மும்பையில் திறக்க உள்ளது. இதனை தொடர்ந்து பிற நகரங்களில் தனது கிளையினை திறக்க முடிவு செய்துள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)