News

Friday, 19 August 2022 11:33 PM , by: Elavarse Sivakumar

மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ள, புதிய முயற்சியை மேற்கொள்ள ரஷ்யாத் தொடங்கியுள்ளது. இதன்படி, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசுத்தொகையை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.

மக்கள் தொகை

மக்கள்தொகை அதிகரித்தால், மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பிறப்பு விகிதம் குறையும் பட்சத்தில், மக்கள்தொகைப் பெருக்கத்தை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுப்பது வழக்கம். அதற்காக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரஷ்ய அரசு.

இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியிருப்பதாவது: ரஷ்யாவில் மக்கள் தொகை சரிவு ஏற்பட்டு வருகிறது. இதை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். தங்களின் 10வது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்தவுடன், குழந்தையின் தாயிடம் வழங்கப்படும்.

விருது

இதேபோல், 10க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற பெண்களுக்கான சோவியத் சகாப்த விருது (தாய் நாயகி) என்று அழைக்கப்படுகிறது.

இது உக்ரைனில் நடந்த போரினால் ஆழமடைந்துள்ள ரஷ்யாவின் மக்கள் தொகை நெருக்கடியை மீட்டெடுப்பதற்கான முயற்சியாகும். இவ்வாறு அவர் கூறினார். அரசின் இந்த அறிவிப்பு ரஷ்ய மக்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க...

கடித்துப் பதம்பார்த்தப் பாம்பு- பதிலுக்கு கடித்துத்துப்பிய சிறுமி!

தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)