News

Thursday, 04 February 2021 08:59 AM , by: Elavarse Sivakumar

Credit : The Financial Express

சேமிப்பு என்பது நமக்கு எப்போதுமே கைகொடுக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், பாதுகாப்பாக முதலீடு செய்து நல்ல பணத்தை சம்பாதிப்பது எப்படி என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த செய்தி.


மாதத்துக்கு 2,000 ரூபாயைச் சேமித்து 30 லட்சம் வரை சம்பாதிக்க சில திட்டங்கள் உள்ளன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

சேமிப்பு (Savings)

எந்த நேரத்தில், எந்த இக்கட்டிலும் நம் கையில் காசு இருந்தால்தான் நமக்கு உதவும். இதுதான், நம்மை அணு அணுவாக அச்சுறுத்திச் சென்ற கொரோனா விட்டுச்சென்ற பாடம்.
எனவே பணத்தைச் சேமிக்க நினைப்பவர்கள் எங்கு முதலீடு செய்வது என்று யோசிப்பார்கள்.

பணத்தை சேமிப்பது என்பதை விட எதில் சேமிப்பது என்பது முக்கியம். ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாயை சேமித்தால் ஒரு பெரிய தொகையை ஈட்ட முடியும். எந்தெந்த திட்டங்களில் சேமித்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

எஸ்ஐபி முதலீடு (SIP Investment)

சிறிய அளவு பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் SIP முதலீடு உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய SIP சிறந்த வழியாகும். இது முதலீட்டின் அபாயத்தைக் குறைப்பதோடு, நல்ல வருவாய் பெருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

இதில் சந்தை ஆபத்து அடிப்படையில் வருமானம் வருகிறது. வங்கிகள் இப்போது வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன. எனவே பலர் அதில் முதலீடு செய்கிறார்கள். பல நிறுவனங்கள் எஸ்ஐபி முதலீட்டில் 15 சதவீதம் வரை வருமானம் தருகின்றன.

பிபிஎஃப்(Public Provident Fund)

உங்கள் பணத்திற்கு எந்த ஆபத்தும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வட்டி வருமானம் கிடைக்க வேண்டுமானால் பிபிஎஃப் உங்களுக்கு சிறந்த வழியாக இருக்கும். இதில் முதலீடு செய்வதன் மூலமும், உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு 2,000 ரூபாய் டெபாசிட் செய்தால் உங்களுக்கு 25 லட்ச ரூபாய் கிடைக்கும். இதற்குப் பிறகு நீங்கள் அதை மேலும் அதிகரிக்கலாம். இத்திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

எல்ஐசி(LIC)

எல்ஐசியில் முதலீடு செய்வதன் நன்மை என்னவென்றால் வட்டியுடன் பல சலுகைகள் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்கள் எல்ஐசியில் உள்ளன. வரி விலக்கு, ஆபத்து காப்பீடு போன்ற வசதிகளும் உள்ளன. எனவே, எல்ஐசி உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

பங்குச் சந்தை(Share Market)

பங்குச் சந்தையைப் பற்றி உங்களுக்கு புரிதல் இருக்குமானால், உங்களால் துணிந்து ரிஸ்க் எடுக்க முடியுமானால், பங்குகளில் முதலீடு செய்யலாம். இதற்காக, நீங்கள் சந்தையில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். அதைப் பொறுத்து நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். பங்குச் சந்தையில் நீண்ட காலமாக பணத்தை முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் நல்ல வருமானத்தைப் பெறலாம்.

மேலும் படிக்க...

5 லட்சம் காய்கறி நாற்றுகள் விற்பனை இலக்கு - தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!

தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்!

மீன் சாப்பிட ஆசையா? நோய்களுக்கு இரையாகப்போறீங்க உஷார்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)