இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் (Indian Farmers Fertilizer Cooperative Limited) விவசாய பட்டதாரி பயிற்சி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வர வேர்க்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தமிழ்நாடு, கேரளம், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், அசாம், குஜராத், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (IFFCO)
அமைப்பு: மத்திய அரசு
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டெம்பர் 5, 2019
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
அதிகாரப்பூர்வ இனையதளம்: https://iffcoindia.com/
பணி: விவசாய பட்டதாரி பயிற்சி பணி
வயது வரம்பு
அதிக பட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வுண்டு.
ஊதியம்
பயிற்சிக்கு தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 33 ஆயிரம் வழங்கப்படும். மேலும் பயிற்சி பூர்த்தி செய்த பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டால் ரூ 37 ஆயிரம் முதல் ரூ 70 ஆயிரம் வரை வழங்கப்படும்.
மொழி திறன்
பணி அமர்த்தப் படும் இடத்தின் உள்ளூர் மொழி பேசவும், எழுதி படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதும், இந்தியில் தேர்ச்சி பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது.
கல்வித் தகுதி
(B.Sc Agriculture) நான்கு ஆண்டு இளநிலை வேளாண் பட்டப்படிப்பை முடித்தவர்கள், இரண்டு ஆண்டு முதுநிலை வேளாண் பட்டப்படிப்பை முடித்தவர்கள், செப்டெம்பர் 2019 பட்டபடிப்பின் இறுதி தேர்வு முடிவுகளை எதிர் பார்த்திருப்பவர்கள் மற்றும் 2016 மற்றும் அதற்கு பிறகு வேளாண் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* பொது (General) மாற்று ஓபிசி (OBC) பிரிவினர்கள் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* எஸ்.சி (SC) எஸ்.டி (ST) பிரிவினர்கள் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்களை அறிய https://iffcoindia.com , https://bit.ly/2Zy7Pj8 அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.