அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் இருப்பதால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், இந்திய தேயிலை சரக்குகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றன. இது குறித்து, இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்ஷுமான் கனோரியா பேசியுள்ளார்.
தேயிலை ஏற்றுமதி (Tea Export)
அனுமதிக்கப்பட்ட வரம்பையும் மீறி, தேயிலையில் அதிகளவு பூச்சிக் கொல்லிகளையும், ரசாயனங்களையும் பயன்படுத்துவதால், வெளிநாடுகளில் அத்தகைய சரக்குகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை நெருக்கடியில் சிக்கி இருப்பதை அடுத்து, தேயிலை வணிகத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது.
ஏற்றுமதி அதிகரிக்க வேண்டிய இத்தகைய சூழலில், அதிக அளவிலான தேயிலைகள் நிராகரிக்கப்படுகின்றன. உள்நாட்டில் விற்கப்படும் அனைத்து தேயிலைகளும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். ஆனாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வழக்கத்திற்கு மாறாக, அதிக ரசாயனம் கொண்ட தேயிலையை வாங்குகின்றனர்.
கடந்த ஆண்டில் 19.59 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் 30 கோடி கிலோவாக அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகள், தேயிலை விஷயத்தில், கடுமையான தரக்கட்டுப்பாடு விதிகளை வைத்திருக்கின்றன. அந்த விதிகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, உள்நாட்டில் ஆணையத்தின் விதிகளை தளர்த்துமாறு பலர் கோரிக்கை வைக்கின்றனர் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க
உலகின் மிக நீளமான தாவரம்: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
மண்வளம் காக்க தென்னை நாரில் கிப்ட் பேக்: மாற்றத்துக்கான வழி!