ரேஷன் அட்டைகள் மூலம் அரசு வழங்கும் இலவச பொருட்களை வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கி வரும் பொருட்களை, தொடர்ந்து 6 மாதங்கள் வரை பெறாமல் இருந்ததாக 80 ஆயிரம் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என கோவா அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஏன் இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்கவில்லை என விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டு ரத்து (Ration card Cancel)
ஒரு ரேஷன் கார்டில் தொடர்ந்து 6 மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றால், அந்த அட்டை ரத்து செய்யப்படும் என்பது அரசின் புதிய விதியாகும். பயன்படுத்தாத ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகத் தேவையுள்ள மற்றொரு ஏழைக் குடும்பத்துக்கு ரேஷன் அட்டை வழங்கப்படும்.
ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டால் அது செல்லாது. மேலும் ரேஷன் அட்டைகளின் புதிய விதிகளின் படி, அதனை அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியாது. பேப்பர் ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் இருந்தது வரை அதனை அடையாள ஆவணமாகப் பயன்படுத்த அனுமதி இருந்தது.
ஆனால் ரேஷன் அட்டைகள் ஸ்மார்ட் அட்டையாக மாற்றப்பட்ட பிறகு, அதில் இதனை அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது பலரும் அறியா தகவல் ஆகும்.
மேலும் படிக்க
PF பயனர்களுக்கு பங்களிப்புத் தொகை அளிக்கவில்லை எனில் நிறுவனங்களுக்கு அபராதம்!
விரைவில் முடிவுக்கு வரும் மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டம்!