இந்தியாவில் உள்ள மக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை உள்ள நிலையில் ஆதார் குறித்து வரும் OTPயை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது. ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் ஓடிபி மற்றும் தனிப்பட்ட விவரங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் (Aadhar)
ஆதார் அட்டையில் உள்ள ஒருவரின் தனிப்பட்ட விவரங்களையும், ஆதார் எண்ணையும் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையை உறுதி செய்யும் பொறுப்பு அரசு நிறுவனமான UIDAI-க்கு இருக்கிறது. இருந்தாலும் ஒருவர் முக்கியமான ஆவணமான ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அலட்சியம் காரணமாக அத்தியாவசிய மற்றும் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வெளியிட கூடாது என அரசு எச்சரித்துள்ளது.
அதன் மூலமாக மோசடியை தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் எண்ணை பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த UIDAI சில உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளது. அதன் படி ஆதார் ஓடிபி-யை கேட்டு ஏஜென்சியில் இருந்து அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வந்தால் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று UIDAI கூறியுள்ளது. மேலும் உங்களது சாதனங்களை தவிர வேறு எதிலும் ஆதாரை பதிவிறக்கம் செய்ய கூடாது. அப்படி செய்தால்ஆதார் அட்டை ஃபைலை நீக்குவதை உறுதிசெய்ய வேண்டும்.
எச்சரிக்கை (Alert)
ஆதார் அட்டையை மற்றவர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதை தவிர்க்க தங்கள் கார்டுகளை லாக் செய்ய வேண்டும். தேவைப்படும்போது அதை அன்-லாக் செய்யவும் முடியும். இதற்கு உங்களின் 16 இலக்க விஐடி என்கிற விர்ச்சுவல் எண்ணை பயன்படுத்த வேண்டும். அதே போன்று, ஆதாரில் உங்கள் மொபைல் எண்ணை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்குமாறு UIDAI பரிந்துரைத்துள்ளது. மேலும் உங்கள் சரியான மொபைல் எண் அல்லது மின்னஞ்சலை ஆதாருடன் இணைத்துள்ளீர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு வேளை உங்களுக்கு ஏதாவது சிக்கல் வந்தால் 1947 என்கிற டோல்-ஃப்ரீ எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க
நாடு முழுதும் அமலுக்கு வருகிறது: பால ஆதார் திட்டம்!
PF கணக்கில் 40,000 ரூபாய் டெபாசிட்: யாருக்கெல்லாம் கிடைக்கும்?