News

Tuesday, 26 July 2022 06:47 PM , by: Elavarse Sivakumar

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிடட் 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 28ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகை, போட்டித் தொடக்கம் உள்ளிட்டவற்றால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது.

நெரிசல்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

44-வது சர்வதேச செஸ்

தமிழக மக்கள் மட்டுமல்லாமல், உலக விளையாட்டு வீரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

சென்னையில் துவக்கவிழா

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், வரும் 28-ந்தேதி நடக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் சர்வதேச விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

28ம் தேதி விடுமுறை

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே வருகிற 28-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அன்று அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

27ம் தேதி

மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 27-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் பணி நாளாக இயங்கும் என்று அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க...

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை- TNPSC அறிவிப்பு!

இதய ஆரோக்கியத்திற்கு தினமும் 3 அல்லது 4 முந்திரி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)