கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவியது. இந்நிலையில் வருகிற அடுத்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையினை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் சிவலோகம் (கன்னியாகுமரி) 2 செ.மீ, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, சிற்றாறு-1 (கன்னியாகுமரி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), மாஞ்சோலை (திருநெல்வேலி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி) பகுதியில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், நேற்று (02-01-2024) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (03-01-2024) அதே பகுதிகளில் நிலவுகிறது. நேற்று (02-01-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (03-01-2024) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் போக்கில்- அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையினைப் பொறுத்த வரை மழைக்கான வாய்ப்பு விவரம் பின்வருமாறு-
03.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
04.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
05.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 06.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Read also: சொட்டு நீர் பாசனம் அமைக்க சரியான நேரம்- மானியத்தை அறிவித்த ஆட்சியர்
07.01.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர். திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 08.01.2024 மற்றும் 09.01.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மேலும் குமரிக்கடல், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கும் பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தை காணவும்.
Read also: வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு பட்டயப்படிப்பு- அரசு சார்பில் 50 % நிதியுதவி