பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 July, 2024 2:48 PM IST
TNAU ODL courses (pic:TNAU)

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம் செயல்பட்டு வருகிறது. பட்டயப்படிப்புகள், சான்றிதழ் பாடங்கள், இணையவழிக் கல்வி போன்றவை செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக தொழில்நுட்ப பாடங்கள் குறித்த புதிய பட்டயப்படிப்புகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி (08.07.2024) (திங்கட்கிழமை) அன்று வெளியிட்டார்.

வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர்கள், மகளிர்கள், இளைஞர்கள், பள்ளிப்படிப்பை தொடர இயலாதவர்கள், சுயதொழில் முனைவோர்கள், கிராமங்களில் சிறுதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் தங்களின் தொழில்நுட்ப அறிவையும் அனுபவங்களையும் வளர்த்துக்கொள்ளும் வண்ணம் இவ்வியக்ககத்தின் வாயிலாக பல சான்றிதழ் பாடங்கள், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு மற்றும் இதர பட்டயப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

44 வகையான சான்றிதழ் பாடங்கள்:

திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 44 வகையான ஆறுமாத கால சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் தென்னை சாகுபடித் தொழில்நுட்பங்கள், காளான் வளர்ப்பு,மூலிகைப் பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர்பெருக்கமுறைகள், நவீன கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள், திடக்கழிவு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்கள், அங்கக வேளாண்மை, பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், ரொட்டி மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், தேனீ வளர்ப்பு, அலங்காரத் தோட்டம் அமைத்தல் ஆகிய பாடங்கள் பயில்வோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் பல்வேறு கரும்பு சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் கள அலுவலர்களுக்கு நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் என்னும் சான்றிதழ் பாடம் நடத்தப்படுகிறது.

இணையவழி கற்றல்:

நேரடி பயிற்சி வகுப்புகளுக்கு வர இயலாதவர்களுக்காகவே அலங்காரத் தோட்டம் அமைத்தல், மூலிகை மற்றும் நறுமணப் பயிர் உற்பத்தி, மண்புழு உரம் தயாரித்தல், வீடு மற்றும் மாடித்தோட்டம் அமைத்தல், வீட்டுத்தோட்டத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை அங்கக வேளாண்மைக்கான இடுபொருள்கள் போன்ற பாடங்களை நம் நாட்டில் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளும் வகையில் இணையவழியில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டு- புதிய பட்டயப்படிப்புகள்:

இந்த ஆண்டு (2024) முதல் பாதுகாக்கப்பட்ட குடில்களில் தோட்டக்கலை செடிகள் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் (Protected Cultivation), ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) முறையில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணையவழி தொழில்நுட்பங்கள் (Smart Farming) மற்றும் வேளாண்மையில் ஆளில்லா வான்கலம் தொழில்நுட்பங்கள் (Drone Technology) போன்ற புதிய பட்டயப்படிப்பு பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற மக்களுக்கான சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்குகிறது. தொலைதூரக் கல்வியை விரும்பும் நகர்புற வாசிகள் மற்றும் நகரங்களின் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதிகளில் நிலம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, பொது இடங்கள், சுகாதாரம், காற்று மற்றும் நீர் தரம் போன்றவற்றை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளுக்காக இந்தப் பாடங்கள் துவங்கப்பட்டுள்ளன.

இதில் அலங்காரத் தோட்டம், அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்புத் தொழில்நுட்பங்கள், மாடி மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் இந்த ஆண்டு துவங்கப்பட உள்ளன.

கற்பவர்களின் நலனுக்காக அந்தந்தத் துறை விஞ்ஞானிகளின் தீவிர பங்கேற்புடன் சுய கற்றல் கையேடுகளை தயாரிப்பதில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இது தவிர, பாடப் புத்தகங்கள் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டு, தொடர்ச்சியான கற்றலை மேம்படுத்துவதற்காக விளக்கப்படங்கள், அட்டவணைகள் போன்றவற்றுடன் அச்சிடப்படுகின்றன.

Read also: TNAU துணைவேந்தருக்கு கெளரவ கர்னல் பதவி வழங்கியதில் இருக்கும் சிறப்பம்சம் என்ன?

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் வேளாண்மைக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களிலும் இப்படிப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு

  • இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003 .
  • ph: 94421 11048 / 94890 51046 /0422-6611229
  • மின்னஞ்சல்: odl@tnau.ac.in
  • இணையதளம்: www.tnau.ac.in

Read more:

இயற்கையின் அற்புத கொடை "பூஞ்சைகள்” - ஏன் தெரியுமா?

சொர்ணவாரி நெல் மற்றும் கம்பு பயிருக்கு பயிர் காப்பீடு- இறுதித்தேதி அறிவிப்பு!

English Summary: In TNAU ODL Introducing New Diploma courses in Hydroponics and Drone Technology
Published on: 09 July 2024, 02:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now