தென்னை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி வேளாண் கூடுதல் இயக் குநர் (தோட்டக்கலைதுறை) வேதாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தென்னை சாகுபடியாளர்களுக்கு உற்பத்தி ஊக்கத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்க திட்டமிட்டு, விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பயனாளிகள் பட்டியல்
இவ்விண்ணப்பங்கள் வயல் ஆய்வு செய்த பின் தென்னை சாகுபடி செய்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக புதுச் சேரியில் உள்ள சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் இன்று (டிச.7) முதல் வரும் 18-ம் தேதி வரை ஒட்டப்பட்டிருக்கும். மேலும் புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையதளத்திலும் (https://agri.py.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துக்கேட்பு
இப்பட்டியலில் ஏதேனம் ஆட்சேபனை இருப்பின் வரும் 18-ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள வேளாண்கூடுதல் இயக்குநர் (தோட்டக் கலை) தாவரவியல் பூங்கா அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தென்னை ஆராய்ச்சி பணியைத் துவங்க வேண்டுமென விவசாயிகள் அரசிடம் கோரிக்கை!
டெல்லியில் டிராக்டர் பேரணிப் போராட்டத்தை கையிலெடுத்த விவசாயிகள்
காரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம்! வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்!