குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால் தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமைக்கான சமீபத்திய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.
தமிழ்நாடு , புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட தென்கிழக்கு பகுதிகளில் பிப்ரவரி 2-ம் தேதியும் கனமழை மற்றும் கடுமையான வானிலை நீடித்து வருகிறது.
வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.02.2023) அதிகாலை 03:30 - 4:30 மணி அளவில் இலங்கை-திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை காலை (03.02.2023) நிலவக்கூடும்.
இதன் காரணமாக,
02.02.2023: தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: வங்கி விடுமுறை பிப்ரவரி 2023: வங்கி வேலையை இந்நாட்களில் திட்டமிடாதீர்
03.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
05.02.2023 மற்றும் 06.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தரைக்காற்று எச்சரிக்கை:
02.02.2023: தென்தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது வீசக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
03.02.2023: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.02.2023: குமரிக்கடல் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
அசத்தலான தினை அவுல் வைத்து சூப்பர் டிபன்!
வங்கி விடுமுறை பிப்ரவரி 2023: வங்கி வேலையை இந்நாட்களில் திட்டமிடாதீர்