விழுப்புரத்தில் பாமாயில் மர சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர் விவசாயிகள். நிலையான வருமானம் ஈட்டுவதற்கு சிறந்த பயிர் என்றால் அது பாமாயில் தான் என அடித்துக் கூறுகிறார் விழுப்புரத்தை சேர்ந்த விவசாயி கூறுகிறார்.
விழுப்புரம் அருகே ஒருகோடி கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயி சூர்யா (வயது 32) கடந்த 15 வருடங்களாக பாமாயில் மர சாகுபடி செய்து வருகிறார். நிலையான வருமானம் தருவதில் பாமாயில் ஒரு சிறந்த பயிராக இருக்கிறது என்கிறார்.
பாமாயில் எண்ணெய் சாகுபடி குறித்து பல்வேறு தகவல்களை விவசாயி சூர்யா நம்மிடையே பகிர்ந்தார். அவர் கூறுகையில்.. "2007 ஆம் ஆண்டு பாமாயில் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். பல பயிர்கள் இருந்தாலும் நிலையான வருமானம் தருவது பாமாயில் தான். டெனீரா ரக மரத்தை 6 ஏக்கரில் பயிர் செய்தேன். ஒரு ஏக்கருக்கு 56 செடிகள் என 15 மாத செடிகளை வாங்கி நடவு செய்தேன். பாமாயில் மரங்களுக்கு தண்ணீர் வசதி இருந்தால் நல்ல மகசூல் கிடைக்கும். நல்ல மகசூல் கிடைத்ததைத் தொடர்ந்து கூடுதலாக 7 ஏக்கரில் பாமாயில் மரம் வளர்த்து வருகிறேன்.
செடிகள் வைத்து 5 வருடங்களில் காய்கள் காய்க்க ஆரம்பித்து விடும். பாமாயிலுடன் ஊடுபயிராக வேர்க்கடலை, உளுந்து, திணை ஆகியவற்றை பயிர் செய்யலாம். பாமாயில் மரம் வளர்க்க, எண்ணெய் பனை கன்றுகளை தமிழக அரசு, மானிய விலையில் ஒரு ஹெக்டேருக்கு 143 கன்றுகள் என்ற விகிதத்தில் வழங்குகிறது.
மேலும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 ஆயிரம் மதிப்புள்ள இடுபொருட்களை இலவசமாகவும், மானிய விலையில் சொட்டு நீர் பாசனம் செய்ய சலுகைகளும் அரசு வழங்குகிறது.எண்ணெய் சாகுபடி செய்ய குறைவான வேலையாட்கள் மட்டுமே போதுமானது. பாமாயில் மரத்தின் வயதுக்கேற்ப மகசூல் அதிகரிக்கும்.
மேலும் படிக்க: