வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை, மத்திய நிதியமைச்சகம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
வருமான வரித்துறைக்கு ஒவ்வொருவரும் நிதி ஆண்டு தோறும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுக்கு, ரூ.2½ லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018 முதல் கட்டாயமாக்கப்பட்டது.
வருமான வரிக்கணக்கு (Income Tax Returns)
அந்த வகையில் கடந்த, 2018-2019-ம் நிதியாண்டுக்கான, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2019 ஏப்ரல் மாதம் தொடங்கியது. 2018-2019-ம் நிதியாண்டுக்கான, அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்தது.
மத்திய நிதியமைச்சகம் உத்தரவு (Finance Ministry)
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, வருமானவரிக் கணக்குத் தாக்க செய்யக் காலஅவகாசம் ஏற்கனவே செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சிக்கல்களை கருத்தில் கொண்டு நவம்பர் 30-ந்தேதி வரை, தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க...
காரீப் சந்தைப் பருவத்திற்கு பருப்புகள், எண்ணெய் வித்துகள் கொள்முதல் -மத்திய அரசு ஒப்புதல்!
காந்தி ஜெயந்தி அன்று 1.16 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்!