இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 October, 2022 10:29 AM IST
3% DA Hike

கடந்த பல மாதங்களாக அரசு ஊழியர்கள் தங்களின் அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருந்தனர். இறுதியாக அவர்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டது. அதுவும் தீபாவளி சமயத்தில்.

தீபாவளி பரிசு

தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 23 அன்று, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டரில், ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க அஸ்ஸாம் அரசு முடிவு செய்துள்ளதாக உறுதிசெய்துள்ளார். இந்த அகவிலைப்படியானது 2022 ஜூலை 1 முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு ஊழியர்கள் தரப்பிலிருந்தும் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ”உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று ட்வீட் செய்துள்ளனர்.

பணிக்கொடை உயர்வு

மாநில அரசு ஊர்க்காவல் படையினரின் தினசரி பணிக்கொடையை 300 ரூபாயில் இருந்து 767 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அகவிலைப்படியை உயர்த்திய பிறகு, ஊர்க்காவல் படையின் சம்பளம் 23,010 ஆக இருக்கும். இந்த உயர்வை உடனடியாக அமல்படுத்தவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அஸ்ஸாம் முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அஸ்ஸாம் காவல் துறையின் முக்கியப் பிரிவான ஊர்க்காவல் படையினர், மாநிலத்தில் சட்ட அமைப்புகளைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள். சுமார் 24,000 ஊர்க்காவல் படையினரின் கோரிக்கையை மனதில் கொண்டு, அவர்களின் தினசரி உதவித்தொகையை நாங்கள் அதிகரித்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

தீபாவளிக்கு முன்னதாக, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அஸ்ஸாம் அரசு உயர்த்தியுள்ளது. முன்னதாக உத்தரப் பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் DA மற்றும் DR ஐ உயர்த்தியது நினைவுகூரத்தக்கது.

மேலும் படிக்க

EPFO-வின் புதிய அறிவிப்பு: கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!

SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: இதோ சூப்பரான தீபாவளி பரிசு!

English Summary: Increase in allowances for government employees: State government gave Diwali gifts!
Published on: 24 October 2022, 10:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now