News

Thursday, 06 April 2023 04:30 PM , by: R. Balakrishnan

Allowance hike

நாட்டில் மத்திய அரசைத் தொடர்ந்து, தற்போது கோவா மாநில அரசும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அகவிலைப்படி (Allowance)

இந்தியாவில் கடந்த மாதம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி அகவிலைபடியை 4% சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இதன் வாயிலாக 47.58 லட்சம் அரசு ஊழியர்களும் 69.76 ஓய்வூதியர்களும் பயன் பெற்று வருகின்றனர். தற்போது உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி 2023 ஜனவரி 1ஆம் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவீதத்தை அகவிலைபடியாக பெற்று வருகின்றனர். மத்திய அரசை தொடர்ந்து ராஜஸ்தான், ஜார்கண்ட், பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களும் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த நிலையில் கோவா மாநில அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 38% சதவீதத்தில் இருந்து 42% மாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த புதிய அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதியிட்டு கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியுடன் ஜனவரி முதல் மார்ச் வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகையும் இம்மாதம் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு: கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!

சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம்: பயன்பெறுவது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)