குடியாத்தம், ஆம்பூர் பகுதியில் இருந்து சேலம் மார்க்கெட்டிற்கு கொய்யாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ரூ40 முதல் ரூ50 வரை விற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் கனமழையால் தத்தளிக்கும் நேரத்தில், குடியாத்தம் மற்றும் ஆம்பூரிலிருந்து சேலத்திற்கு கொய்யாப்பழங்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளன. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொய்யாப்பழம் வரத்து அதிகரிப்பு:
சேலம் ஆற்றோர மார்க்கெட்டில் இருக்கும் மொத்த வியாபார பழக்கடைகளுக்கு (wholesale grocery stores) கடந்த ஒரு வாரமாக புதுச்சேரி மற்றும் குடியாத்தம், ஆம்பூர் பகுதியில் இருந்து கொய்யாப்பழம் (Guava) வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 5 டன் அளவிற்கு வந்து விற்பனையாகிறது. இங்கிருந்து பெட்டிகளாக கொய்யாப்பழத்தை ரூ600க்கு (24 கிலோ) சில்லரை வியாபாரிகள் (Retailers) வாங்கிச் செல்கின்றனர். இதர சில்லரை பழக்கடைகளிலும், சாலையோர பழக்கடைகளிலும் ஒரு கிலோ கொய்யாப்பழம் ரூ40 முதல் ரூ50 வரையில் விற்கப்படுகிறது.
வியாபாரிகள் கருத்து:
நாட்டு கொய்யா (சிவப்பு), ரூ50க்கு விற்கின்றனர். இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், “சேலம், தர்மபுரி சுற்று வட்டார பகுதிகளில் கொய்யா சீசன் (Guava season) முடிந்த நிலையில், தற்போது குடியாத்தம், ஆம்பூர் பகுதியில் இருந்து கொய்யா அதிகளவு வருகிறது. இதனை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்கின்றனர். இந்த கொய்யா வரத்து இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர்களைப் பாதுகாக்கும் வகையில், வனவிலங்குகளை விரட்ட மருந்து கண்டுபிடிப்பு!
குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும்! புதிய சட்டம் இயற்ற விவசாயிகள் கோரிக்கை!