குறைந்த விளைச்சலினாலும் பதுக்கலாலும் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
சமீபத்தில் நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது, அவ்வப்போது பருப்புகளின் விலை உயர்ந்து, மற்ற பருப்பு வகைகளின் விலையிலும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகிறது.
உலகிலேயே பருப்பு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், இந்தியா பருப்பு பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்க்கது.
ஓவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் சுமார் 600 டன் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இது தேவையான அளவை விட குறைவாக உள்ளது என்ற காரணத்தினால் வெளிமாநிலங்களில் இருந்து அதிகம் கொண்ட வர வேண்டிய நிலை உண்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா சபையில் நடப்பாண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்த காரணத்தால் மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறுதானிய சாகுபடியை அதிகப்படுத்த பல மானிய உதவிகளை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக பல விவசாயிகள் பருப்புக்கும் எண்ணெய் விதைகளுக்கு மாற்றாக சிறுதானிய சாகுபடி செய்துவந்தனர்.
இதனால் பருப்புகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பருப்புகளின் தட்டுப்பாடும் தற்போது அதிகரித்து வருகிறது. இதை பல ஆன்லைன் விற்பனையாளர்கள் அறிந்துகொண்டு லாபநோக்குடன் பல ஆயிரம் டன் கணக்கான பருப்பு வகைகளை பதுக்கி வைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக துவரம் பருப்பு தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்து, ஒரே வாரத்தில், 40 ரூபாய் வரை உயர்ந்து, கிலோ ரூ.160க்கு விற்கப்படுகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.
அதிகம் இருப்பு வைப்பதை தடுப்பதற்கான முயற்சிகளை அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருக்கிறது.
பரூப்பு வகைகளின் தட்டுப்பாடுகளை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாக உள்ளது.
மேலும் படிக்க
விவசாயிகளை கவரும் e-NAM: ஒரே வாரத்தில் 170 டன் விவசாய பொருட்கள் விற்பனை!
"5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு" - வேளாண் அமைச்சர்